video image x page
இந்தியா

கோவா சென்ற விரைவுரயில்.. ஏசி பெட்டியில் நகர்ந்த பாம்பு.. பயந்துபோன பயணிகள்.. #ViralVideo

விரைவு ரயில் ஒன்றில் ஏசி 2 அடுக்குப் பெட்டியில் பயணித்த பயணிகள் உயிருள்ள பாம்பு இருப்பதைக் கண்டு திடுக்கிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து கோவாவுக்கு 17322 என்ற எண் கொண்ட வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயில், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது ஏசி 2 அடுக்குப் பெட்டி எண்கள் 31 மற்றும் 33இல் பயணிகள் பயணித்துள்ளனர்.

இதில், ரயிலின் பர்த்தின் திரைச்சீலை அருகே பாம்பு நகர்வதைக் கண்டு பயந்துபோய் அலறியடித்துள்ளனர். இது, பயணிகளிடம் மேலும் அச்சத்தைத் தூண்டியது.

இதைப் படம்பிடித்த அங்கிதா குமார் சின்ஹா ​​என்ற பயணி, ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை டேக் செய்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவில், ”நிலைமையின் தீவிர தன்மையை உணர்ந்து விரைந்து நடவடிக்கை எடுங்கள்” என அதில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, ரயில்வே துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். அந்தப் பாம்பை ரயில்வே ஊழியர் ஒருவர் பெட்ஷீட்டைப் பயன்படுத்தி பாதுகாப்பாக பிடிக்கிறார். இருப்பினும், இறுதியில் அந்தப் பாம்பு என்ன ஆனது என்பது வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனாலும் அந்த வீடியோவின் பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் ‘அதை ரயிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்’ எனப் பரிந்துரைக்கின்றன. இதற்கிடையே, இந்திய இரயில்வேயின் ராஞ்சி பிரிவு, சின்ஹாவின் புகாரை ஏற்றுக்கொண்டதுடன், பிரச்னையை உரிய அதிகாரிகளிடம் கூறி தீர்த்துவைப்பதாக உறுதியளித்துள்ளது.

இதையும் படிக்க: ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ - முழக்கம் எழுப்பிய ம.பி. நபர்.. நீதிமன்றம் விதித்த விநோத நிபந்தனை!