தூங்கும் போராட்டம் முகநூல்
இந்தியா

’தூங்கும் போராட்டம்‘ - கொளுத்தும் வெயிலை சமாளிக்க மாணவர்கள் கையில் எடுத்த நூதன போராட்டம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

பஞ்சாப்பில் அதிகரித்து வரும் வெப்ப அலையை சமாளிக்க இயலாமல் அமிர்தசரஸில் உள்ள விடுதி ஒன்றில் ஏசி வேண்டும் என்று வலியுறுத்தி தூங்கி நூதன முறையில் மாணவர்கள் போராடி வருவது அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மழை குளிர்வித்தாலும், சில பகுதிகளில் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது . குறிப்பாக, பஞ்சாப்பில் வெளுத்தும் வாங்கும் வெயிலின் நிலவரம் நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில், பஞ்சாப்பில் உள்ள விடுதி ஒன்றில் வெயிலை சமாளிக்க ஏசி வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் நூதன முறையில் போராடி வருவது அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறந்த நிர்வாகப்பள்ளிகளில் ஒன்றான அமிர்தசரஸ் ஐஐஎம் சேர்ந்த மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதி களில் அதிக வெப்பத்தை சமாளிக்க ஏசி வசதி இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஆனால், அப்பகுதியில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக ஏசி வேண்டும் என்று வலியுறுத்தி தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவ்விடுதி மாணவர்கள். இதன் காரணமாக கல்லூரி நூலகத்தில் உள்ள ஏசியை போட்டு தூங்கி நூதன முறையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏசி வேண்டி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் கையில் எடுத்திருக்கும் இந்த போராட்டம் சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளது. கூடுதலாக, அமிர்தசரஸ் மற்றும் பஞ்சாப்பின் பிற பகுதிகளில் வெப்ப அலையானது 45 டிகிரிக்கும் மேல் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.