இந்தியா

’கூகுள்’ நாரதர், மகாபாரத ’லைவ்’, ’டெஸ்ட் டியூப்’ சீதா தேவி: கிலி கிளப்பும் துணை முதல்வர்!

webteam

சீதா தேவி சோதனை குழாய் தொழில்நுட்பத்தின் மூலம் பிறந்தார் என்று உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

லக்னோவில் நடந்த பெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறும்போது, ’நாரதர் அனைத்து தகவல்களையும் அறிந்தவர். அவர் கூகுள் போன்று தகவல்களையும் பரப்பியவர். அதே போன்று மகாபாரத காலத்திலேயே நேரடி ஒளிபரப்புத் தொடங்கி விட்டது. மகாபாரத போர்க்காட்சிகளை திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் விளக்கி கூறியுள்ளார்’ என்றார். இவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. 

இந்நிலையில், சீதா தேவி பற்றிய தினேஷ் சர்மாவின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திறன் மேம்பாடு குறித்து பேசிய அவர், ’சீதா தேவி மண்பானையில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் டெஸ்ட் டியூப் பேபி முறை அப்போதே நடைமுறையில் இருந்துள்ளது. ராமாயணக் காலத்திலேயே மருத்துவ துறையில் நவீன சிகிச்சை முறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன  என்றார்.