இந்தியா

இந்தியாவுக்கு உதவ கொரோனா நிவாரண நிதி திரட்டும் சிங்கப்பூரின் வர்த்தக அமைப்புகள்

EllusamyKarthik

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு உதவும் நோக்கத்துடன் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகின்றன சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக அமைப்புகள். 

சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (SICCI), லிட்டில் இந்தியா வணிகர்கள் மற்றும் மற்றும் பாரம்பரிய சங்கத்தினர் இணைந்து இந்த நிதி திரட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வங்கி கணக்கு ஒன்றையும் தொடங்கி நிதி திரட்டும் பணியை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். 

“வரலாறு காணாத இந்த துயரமான நேரத்தில் இந்தியாவின் பக்கம் நாங்கள் நிற்க விரும்புகிறோம். அவசர தேவைக்கு உதவும் நோக்கில் இந்த நிதி திரட்டப்படுகிறது. சிங்கப்பூர் வாழ் மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என வணிகர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். 

இந்திய நாட்டின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா PM-CARES நிதிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்து உதவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.