இந்தியா

டூரிஸ்ட் ஸ்பாட் ஆகுது மோடி டீ கடை!

டூரிஸ்ட் ஸ்பாட் ஆகுது மோடி டீ கடை!

webteam

பிரதமர் மோடி டீ விற்ற இடமான குஜராத் மாநிலம் வாத்நகர் ரயில்வே நிலையம் மற்றும் டீ கடை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் உள்ள வாத்நகர் ரயில் நிலையத்திற்குள் சிறிய தேநீர் கடை உள்ளது. பிரதமர் மோடி தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கியது இங்கேதான். எனவே இந்த இடம் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். 

மேலும், வர்த்தக வளர்ச்சி ஏற்படுத்தும் பொருட்டு உலக வரைபடத்தில் வாத்நகர் ரயில்நிலையத்தை சுற்றுலா இடமாக மாற்றப்படும். அங்கிருக்கும் அந்த தேநீர் கடை நவீன கடையாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரதமரின் பிறப்பிடமாக மட்டுமின்றி, வாத்நகரில் முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க ஷர்மிஷ்டா ஏரி உள்ளது.