video image x page
இந்தியா

உ.பி.| சமையல் பாத்திரத்தில் சிறுநீர்.. உணவில் கலப்பா? கேமரா வைத்த முதலாளி.. வசமாக சிக்கிய பணிப்பெண்!

உத்தரப்பிரதேசத்தில் முதலாளியின் வீட்டுச் சமையலறையில், பணிப்பெண் ஒருவர் சிறுநீர் கழிப்பதைத் தொடர்ந்து, அவர் ஏதேனும் உணவில் கலந்திருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் கிராசிங் ரிபப்ளிக் பகுதியில், தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவருடைய சாந்தி நகரைச் சேர்ந்த ரீனா என்ற பெண்மணி, கடந்த 8 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக இருந்துவருகிறார்.

இந்த நிலையில், அக்குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சைபெற்றும் சரியாகவில்லை. இதனால் சாப்பிடும் சாப்பாட்டில் அவர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதைக் கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கேமராவை ஆன்செய்து சமையல் அறையில் மறைத்துவைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவில் பதிவானதுபடி அவருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அந்த வீடியோ பதிவில், பிரிட்ஜ் மறைவில் நின்று அவர் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிப்பதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதை எடுத்து உணவு சமைக்கும் இடத்தில் வைக்கிறார். இதையடுத்து, அதைக் கலந்து அவரது முதலாளி குடும்பத்திற்கு அவர் உணவு சமைத்துக் கொடுத்திருக்கலாம் எனவும், அதன்காரணமாகவே அந்தக் குடும்பத்தின்றகு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பாபாசித்திக் படுகொலை| சல்மான்கானுக்கு மிரட்டல்.. மிகப்பெரிய நெட்வொர்க்.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தொழிலதிபரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸாரிடம், முதலில் ரீனா மறுத்துள்ளார். பின்னர், வீடியா ஆதாரத்தைக் காட்டியதும் அமையதியாக இருந்துள்ளார். அதன்பேரில், போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த தொழிலதிபர், “இவ்வளவு காலம் தங்களிடம் பணிபுரிந்த ரீனாவை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. முன்பு வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்தபோதும், அவர்மீது சந்தேகம் வந்ததில்லை. ஆனால் தற்போது நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, எங்களது குடும்பத்தை மிகுந்த காயப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல் துறை உதவி ஆணையர் (ஏசிபி) வேவ் சிட்டி, லிபி நாகயாச், ”வீடியோ ஆதாரத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் விசாரணையின்போது பணிப்பெண் உணவில் சிறுநீரைக் கலக்கவில்லை என மறுத்துள்ளார். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு | எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி மோதல்.. மத்திய அரசு அதிரடி முடிவு!