இந்தியா

ஆட்சி கலைப்பு தொடர்பான சிவராஜ் சிங் குரல் ஆடியோ ? - மத்தியப் பிரதேசத்தில் சர்ச்சை

ஆட்சி கலைப்பு தொடர்பான சிவராஜ் சிங் குரல் ஆடியோ ? - மத்தியப் பிரதேசத்தில் சர்ச்சை

webteam

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைப்பு தொடர்பாக தற்போதைய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குரலில் பேசப்பட்டுள்ள ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பதவி விலகியதால் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து பாஜகவின் மாநில தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் சிவராஜ் சிங் சவுகான் குரலில் ஒரு ஆடியோ தற்போது வெளியாகி மத்தியப் பிரதேச அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், ஜோதிராதித்ய சிந்தியாவிடம் சிவராஜ் சிங் சவுகான் பேசுவது போலவும், அத்துடன் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைக்க மத்திய தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகக் கூறியது போலவும் உள்ளது. துளசி சிலாவத் இல்லாமல் ஆட்சியைக் கலைக்க வாய்ப்புள்ளதா ? எனவும் சிவராஜ் சிங் கேட்டது போல ஆடியோவில் இருக்கிறது.

இந்த ஆடியோ விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ விவகாரத்தைக் காங்கிரஸ் கட்சியினர் பெரும் குற்றச்சாட்டாக முன்வைத்துப் பேசி வருகின்றனர்.