இந்தியா

“ககன்யான் திட்டம் தாமதம் அடையாது” - இஸ்ரோ தலைவர் சிவன்

“ககன்யான் திட்டம் தாமதம் அடையாது” - இஸ்ரோ தலைவர் சிவன்

webteam

இஸ்ரோவின் பல மையங்களில் கிருமிநாசினி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அனைத்து மையங்களிலும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு வாபஸ் பெறும் பட்சத்தில்தான் இஸ்ரோவின் அடுத்த கட்ட ஏவுதல் திட்டங்கள் இருக்கும். ஏற்கெனவே ரஷ்யாவிற்கு பயிற்சிக்கு சென்ற விண்வெளி வீரர்களின் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ககன்யான் திட்டம் தாமதம் அடையாது. ஏற்கெனவே அத்திட்டம் 2022 ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. போதிய கால அவகாசம் இருக்கிறது.

இஸ்ரோவின் பல மையங்களில் கிருமிநாசினி தயாரிக்கும் பணிகளும், செயற்கை சுவாச கருவிகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மற்றபடி குறைந்த அளவிலான அலுவலர்களே அனைத்து மையங்களுக்கும் சென்று செயற்கைக்கோள் உடைய கட்டுப்பாடுகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” தெரிவித்தார்