இந்தியா

மகாராஷ்டிர அரசியல்: நடிகை ஊர்மிளாவை களம் இறக்கும் சிவசேனா.!

மகாராஷ்டிர அரசியல்: நடிகை ஊர்மிளாவை களம் இறக்கும் சிவசேனா.!

JustinDurai

மகாராஷ்டிர சட்டப்பேரவை மேலவை நியமன உறுப்பினராக நடிகை ஊர்மிளாவை தேர்வு செய்துள்ளது சிவசேனா.

பாலிவுட் நடிகையான ஊர்மிளா, சென்ற வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். பாலிவுட் நட்சத்திரமான கங்கனா ரணாவத் மும்பை நகரை மற்றொரு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சாடிய போது, அவருக்கு எதிராக களமிறங்கி, சிவசேனாவின் ஆதரவை பெற்றுள்ளார்.

ஊர்மிளா காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி ஒரு வருடம் ஆகும் நிலையில், தற்போது மகாராஷ்டிராவின் மாநிலங்களவை உறுப்பினராக, சிவசேனாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநர் முன்மொழியும் 12 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஊர்மிளாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்ஜய் ராத் , மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேயிடம் ஊர்மிளா தனது ஒப்புதலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஊர்மிளா கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மும்பையின் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

ஊர்மிளாகாங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும் இவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, நடிகை ஊர்மிளா இதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், நடிகர் சுஷாந்த் கொலைவழக்கில்,மும்பை நகரையும் , மும்பை போலீசை சாடும் வகையில், மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என குறிப்பிட்டார். இதனால் , சிவசேனா செய்தி தொடர்பாளர் மற்றும் கங்கனா இடையே சொற்போர் ஏற்பட்டது.

கங்கனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஊர்மிளா, "கங்கனா தனது சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மஹாராஷ்டிராவை, குறை கூறலாம்" என்றார். அதற்கு கங்கனா, ஊர்மிளாவின் விமர்சனத்தை , அவரை கவர்ச்சி நடிகை என்றும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பேசுகிறார் என்றார்.

"ஊர்மிளா ஒரு நடிகை என்பதோடு அவர் சமூக நலனோடு தொடர்புடையவர். மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற போதும், மக்களிடம் நன் மதிப்பை பெற்றுள்ளார் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் " என்கிறார் சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் ராட்.