இந்தியா

ஆட்சி அமைப்பதில் இழுப்பறி : ஆளுநருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு

webteam

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இழுபறி நீடிப்பதற்கு சிவசேனா பொறுப்பு அல்ல என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது.  

முதலமைச்சர் பதவியில் எந்த சமரசமும் செய்ய முடியாது என பாஜக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயாராக உள்ளதாக பாஜக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் தரப்பு கதவு திறந்தே இருக்கிறது என பாஜக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மாகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் சிவசேனா கட்சியை சேர்ந்த தலைவர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர். சிவசேனா தலைவர்கள் ராம்தாஸ் கதம், சஞ்சய் ராவத் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து பேசிய சினசேனா எம்பி சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இழுபறி நீடிப்பதற்கு சிவசேனா பொறுப்பு அல்ல என தெரிவித்துள்ளார். 

இதனிடையே மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தரப்பில் ஆலோசனை நடைபெற்றது. டெல்லியில் சோனியாகாந்தியுடன் தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் சந்தித்தார். பாஜக - சிவசேனா இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில் இரு கட்சி தலைவர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர்.