இந்தியா

மகாராஷ்டிரா: ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

மகாராஷ்டிரா: ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

Sinekadhara

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருப்பதை அடுத்து, வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால், நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொற்று குறைந்த மாநிலங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயில்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களை அனுமதிக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஷீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதே நேரம் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளின் படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.