டெல்லியிலிருந்து உத்தராகண்ட் சென்ற ரயில் திடீரென 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்னோக்கிச் சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் டெல்லியிலிருந்து உத்தராகண்ட் மாநிலம் தனக்பூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்திருக்கிறது. அப்போது தண்டவாளத்தில் மாடுகள் நிற்பதைக் கண்டு அதன்மீது மோதாமல் இருக்க ரயிலை உடனடியாக நிறுத்த முயன்றுள்ளார். அதனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரயில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. இதில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
டெல்லியிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டிமா நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் அங்கிருந்து பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
<iframe width="503" height="283" src="https://www.youtube.com/embed/gEZrXyiExcs" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>