நாட்டின் பெரிய நிறுவனங்கள் சிலவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக அதிர வைக்கும் தரவுகள் வெளியாகி உள்ளன.
BSE 30 எனப்படும் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், தனியார் பத்திரிகையும் இணைந்து எடுத்த புதிய தரவுகளின்படி, பெரிய நிறுவனங்களில் 40.4% அளவுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டைப்பொறுத்தவரை, 932 பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பதிவாகி உள்ளன. 2023-ல் 664 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2021-ல் 344, 2022-ல் 451 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டான 2020-ல் 534 வழக்குகள் பதிவாகின.
POSH எனப்படும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு கமிட்டி உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் இதுபற்றி கூறும்போது, POSH சட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள்.
முன்பும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இருந்தாலும், இப்போது விழிப்புணர்வு காரணமாக பெண்கள் புகார் தர முன்வருவதாக தெரிவிக்கிறார்கள்.