இந்தியா

மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகல்

மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகல்

Rasus

ஆளுநர் மாளிகை ஊழியர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகினார்.

67 வயது நிரம்பிய தமிழகத்தைச் சேர்ந்த அவர், ஆளு‌நர் மாளிகையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்து கொண்டதாக அ‌ங்கு‌ பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், குடியரசுத் த‌லைவர், பிரதமர் மற்றும் ‌மத்திய உள்துறை அமைச்சருக்கு மனு அனுப்பினர். அதில், ஆளுநர் மாளிகையை இளம் பெண்களின் கிளப்‌ போல் சண்முகநாதன் மாற்றிவிட்டதாக புகார் கூறப்‌பட்டிருந்தது. பெண்கள் சர்வசாதாரணமாக வந்து செல்லும் இடமாக மேகாலயா ஆளுநர் மாளிகை மாறிவிட்டதாகவும் ஊழியர்களின் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக சண்முகநாதன் ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சண்முகநாதன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தலைநகர் ஷில்லாங்கில் நேற்று நடைபெற்ற குடியரசுத் தின கொண்டாட்டத்தில் சண்முகநாதன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.