இந்தியா

பாலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 7 அதிநவீன தொழில்நுட்பங்கள்

பாலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 7 அதிநவீன தொழில்நுட்பங்கள்

webteam

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான ‘அனுகூலமான நாடு’ என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டிருப்பதாகவும், இதற்காக எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இந்திய ராணுவம் இன்று காலை 3.30 மணியளவில் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டது. கார்கில் வெற்றியின் கிங்க் ஆக கருதப்பட்ட ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் சிறப்பு, துல்லிய கேமரா. மிக உயரத்திலிருந்து லேசர் நுட்பம் மூலம் குண்டு போடுவது. மொத்தமாக 7 வகையான ஆயுதங்கள் இந்தியத் தரப்பிலிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

  • ‘மிராஜ் 2000’ போர் விமானம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது. ரஃபேல் விமானத்தை உருவாக்கிய டாசால்ட் (Dassault) தான் இதனையும் தயாரித்துள்ளது. ‘மிராஜ்’ என்றால் தமிழில் கானல்நீர். அதாவது மாயத் தோற்றம். இருப்பதை போல கண்களுக்குத் தெரியும். ஆனால் நெருங்கி பார்க்கும் போது அது மாயமாக மறைந்துவிடும். இதனையே கானல்நீர் என்கிறோம். இந்தப் பெயரை குறிக்கும் விதத்தில்தான் இதற்கு மிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  
  • இந்தத் தாக்குதலில் ‘ஜிபியு-12 பாவவே’ (paveway) என்ற லேசர் தொழில்நுட்ப வகை குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன குண்டாகும். இது தாக்குதலின்போது லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இலக்கை உன்னிப்பாக குறி பார்த்து கணிக்கும். பின் தனது அதிரடி தக்குதலை நிகழ்த்தும்.
  • ‘மத்ரா மேஜிக் க்ளோஸ் காம்பட் மிசைல்’என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆயுதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டது. தாக்குதல் சமயம் பாகிஸ்தான் விமானப்படை பதிலடி நடத்தினால் உடனே அதனை ஏதிர்கொள்ளகூடிய அளவுக்கான திறன் இதற்கு உண்டு. 
  • லிடெனிங் போட் (Litening pod)என்னும் லேசர் தொழில்நுட்பம் இதில் உள்ளது. அதனைக் கொண்டு இதனால் இலக்கை எளிதாக அடைய முடியும். 
  •  ‘Netra Airborne Early Warning jet’ தாக்குதலின் போது விமானிகளுக்கான தகவல்கள் மற்றும் இலக்கை பற்றிய தகவல்களை கொடுக்க இது பயன்படுத்தப்பட்டது.
  • 'Ilyushin-78M'என்ற போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • ‘ஹெரான் ட்ரோன்’என்ற கருவியைக் கொண்டு தாக்குதலின் போது எல்லையை இந்திய ராணுவத்தினர் கண்காணித்துள்ளனர்.