உத்தரப்பிரதேசத்தில் ஓநாய்கள் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா-நேபாள எல்லையில் அமைந்திருக்கும் பஹ்ரைச் பகுதியில் இரண்டு மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களை ஓநாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் தூக்கத்தை இழந்து தவித்து வரும் மக்கள், வனத்துறையினருடன் இணைந்து ஓநாய்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓநாய்களை பிடிக்க ஆங்காங்கே பொறிகள், கூண்டுகளை வைத்துள்ள வனத்துறையினர், தெர்மல் டிரோன்கள் மூலம் அவற்றை கண்டறிந்து பிடித்து வருகின்றனர்.
இதுவரை 3 ஓநாய்கள் பிடிப்பட்டுள்ளதாக தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியே தூங்குவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளனர்.