இந்தியா

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சோதிக்க அனுமதி

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சோதிக்க அனுமதி

webteam

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் கொடுத்து சோதிக்க புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அமைத்த நிபுணர் குழு உரிய ஆய்வுகளுக்கு பின் இப்பரிந்துரையை வழங்கியுள்ளது. உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் போட்டியில் இருந்தாலும் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் மேற்கொண்டுள்ள முயற்சிதான் முன்னணியில் இருந்து வருகிறது.

இதில் இந்தியாவில் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட்டும் பங்கு பெற்றுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மருந்தை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிட்யூட் திட்டமிட்டுள்ளது.