இந்தியா

கொரோனா தடுப்பூசி விலையில் முரண் ஏன்? - சீரம் நிறுவனம் விளக்கம்

கொரோனா தடுப்பூசி விலையில் முரண் ஏன்? - சீரம் நிறுவனம் விளக்கம்

jagadeesh

கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் விலை இந்தியாவில் அதிகமாகவும் வெளிநாடுகளில் குறைவாகவும் உள்ளது குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் சீரம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் வெளிநாட்டு நிறுவனங்கள் முன்பணம் தந்ததால் ஆரம்ப கட்ட வினியோகங்களுக்கு குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு இந்தியாவில் விற்கப்படும் விலையையும் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் விலையையும் ஒப்பிடுவது சரியாகாது. மேலும் தடுப்பு மருந்தை அரசுகளுக்கு குறைந்த விலையிலும் தனியார் நிறுவனங்களுக்கு சந்தை விலையிலும் விற்பதாக சீரம் இன்ஸ்டிட்யூட் விளக்கமளித்துள்ளது.

இந்திய அரசுக்கு முதல் கட்டமாக வினியோகிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும் குறைந்த விலையில்தான் தரப்பட்டன என்றும் இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.600க்கு கோவிஷீல்டு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி தேவை அதிகரித்து வரும் அவற்றின் உற்பத்தி அளவையும் அதிகரிக்க அதிக முதலீடுகள் தேவைப்படுகிறது. தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி விலைக் கொள்கை மிகவும் வெளிப்படையானது என்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் விளக்கியுள்ளது.