சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக்கின் அவசர கால தடுப்பூசி பயன்பாட்டிற்கு, போதிய பாதுகாப்பு இல்லாமை மற்றும் செயல்திறன் குறைப்பாட்டினால் ஒப்புதல் கிடைக்கவில்லை என பரவிய தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. அது போலி செய்தி என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை அழிக்கும் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் உலகளவிலான விஞ்ஞானிகள் மும்முரமாக உள்ளனர். இதில் சில நாடுகளில் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் சில மருந்தாய்வகங்களில் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக்கின் அவசர கால தடுப்பூசி பயன்பாட்டிற்கு, போதிய பாதுகாப்பு இல்லாமை மற்றும் செயல்திறன் குறைப்பாட்டினால் ஒப்புதல் கிடைக்கவில்லை என தகவல் பரவியது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் அது போலி செய்தி எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.