பாபா சித்திக் pt web
இந்தியா

முன்னாள் அமைச்சரான தேசியவாத காங். மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலை - அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!

PT WEB

66 வயதான பாபா சித்திக் மும்பை பாந்தரா பகுதியில் உள்ள தனது மகனின் அலுவலகம் அருகே இருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.

முன்னாள் அமைச்சர் சுட்டுக்கொலை

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாபா சித்திக் உயிரிழந்தார். பாபா சித்திக் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

1976ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாபா சித்திக், 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அமைச்சராகவும் பதவிவகித்த வந்த அவர், சமீபத்தில்தான் காங்கிரசில் இருந்து விலகி அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.