uttarpradesh எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி மகா கும்பமேளா 2025|இந்துக்கள் அல்லாதோர் உணவகம் அமைக்க ஏபிஏபி-ன் கிளை அமைப்பு எதிர்ப்பு!

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், அடுத்த ஆண்டு மகா கும்பமேளா, ஜனவரி 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை பிரம்மாண்டமாக கொண்டாட அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் உணவகங்கள் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அகில பாரதீய அகாரா பரிஷத்தின் (ஏபிஏபி) ஒரு பிரிவு அறிவித்துள்ளது. அதில் உள்ள நிரஞ்சனி அகாரா பிரிவைச் சேர்ந்த சுவாமி ரவீந்திர பூரி, இதற்கான முடிவை எடுத்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரவீந்திர பூரி, ”மகா கும்பமேளாவில் இந்தப் பொருட்களை விற்க யாரை அனுமதிக்கலாம் அல்லது உணவு பரிமாறுவது யார் என்பதை அரசாங்கம் இப்போது முடிவு செய்ய வேண்டும். (அங்கீகரிக்கப்படாத) நபர்கள் அதில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் அமைதியாகப் பார்வையாளர்களாக இருக்கமாட்டார்கள்” என்றார்.

இதையும் படிக்க: நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென்கொரிய எழுத்தாளர்! வருத்தமான பின்னணி! உண்மையை உடைத்த தந்தை!

மேலும் அவர், “பாதுகாப்பு வளையத்திற்குள் வருபவர்களை, அந்த இடத்திற்குள் நுழைய அனுமதிக்கும் முன் அடையாளம் காண வேண்டும் என்று நாங்கள் கோருவோம். முஸ்லிம்களுக்கு கடையோ, வணிக இடத்தையோ ஒதுக்கக்கூடாது என்றும் வலியுறுத்துவோம். முதல்வர் யோகி ஆதித்யநாத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தீபாவளி நேரத்தில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற கன்வார் யாத்திரையின்போது, அவ்வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள், உணவு வண்டிகளில் உணவக பெயர்ப் பலகையில் அதன் உரிமையாளர் பெயர் இடம் பெறவேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேல்-காஸா போர் | 4 ராணுவ வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா.. பதிலடியில் தரைப்படை தளபதி மரணம்