இந்தியா

பாக்., வெற்றியை கொண்டாடிய 15 பேர் மீது தேசதுரோக வழக்கு ரத்து

பாக்., வெற்றியை கொண்டாடிய 15 பேர் மீது தேசதுரோக வழக்கு ரத்து

webteam

பாகிஸ்தானின்  கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதாக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட 15 முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டுள்ளது.  
கடந்த ஞாயிற்றுக்கிமை சாம்பியன் ஷிப் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இதனையடுத்து மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியும், பட்டாசு வெடித்தும்,  கொண்டாடியதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் மீது ஷாக்புர் காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  15 முஸ்லிம் இளைஞர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் காண்ட்வா சிறையில் அடைக்கப்பட்டனர். 
இந்நிலையில் அவர்கள் மீதான வழக்கு சாட்சிகள் இல்லாததால்  கைவிடப்பட்டதாக புர்ஹான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் பரிஹார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  
வழக்குப்பதிவு செய்யப்பட்ட 15 பேரும்  இளைஞர்கள், அவர்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும், இல்லை என்பதால் அவர்களது குடும்பத்தினர் குடியரசுத்தலைவர், தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில சிறுபான்மையினர் அமைப்புகளிடம் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடவில்லை. பழிவாங்கவே அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறையிட்டு இருந்தனர். இந்நிலையில் அவர்கள் மீதான தேச துரோக வழக்கு கைவிடப்பட்டுள்ளது.