இந்தியா

ஜம்மு-காஷ்மீர் போலீஸார் மீது தாக்குதல் : 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் போலீஸார் மீது தாக்குதல் : 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

webteam

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்றனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள டெண்டர் கிராமத்தில் சிறப்பு காவல்துறை அதிகாரிகள் மீது இரண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் படுகாயமடைந்தனர். பின்னர் அந்த தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் தலைமறைவாகினர். இதையடுத்து தப்பிச் சென்ற தீவிரவாதிகளை ராணுவத்தினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் இரண்டு தீவிரவாதிகளை சுற்றி வளைத்த இந்தியப் பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள ஜம்மு மண்டலத்தின் ஐஜிபி முகேஷ் சிங், உயிரிழந்த தீவிரவாதிகளின் பெயர் ஆஷிக் ஹுசைன் மற்றும் பாஷரத் ஹுசைன் என தெரிவித்தார்.

இதில் ஆஷிக் என்பவன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கிஷ்த்வார் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பிணையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கிஷ்த்வார் மாவட்டத்தில் இந்த வருடம் தீவிரவாதிகள் நடத்தும் முதல் தாக்குதல் இதுதான் என முகேஷ் சிங் குறிப்பிட்டுள்ளார்.