இந்தியா

பாதுகாப்பு குளறுபடி : புதிய சர்ச்சையில் ஃபேஸ்புக்

பாதுகாப்பு குளறுபடி : புதிய சர்ச்சையில் ஃபேஸ்புக்

webteam

5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளை அடையாளம் தெரியாத சிலர் ஊடுருவி அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் 5 கோடி பேரின் கணக்குகள் லாக் அவுட் ஆக வைக்கப்பட்டதாகவும் இது தவிர பாதிக்கப்பட வாய்ப்புள்ள 4 கோடி பேரின் கணக்குகள் லாக் அவுட் செய்யப்பட்டதாகவும் ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது. இந்நிகழ்வின் காரணமாக யாரும் தங்கள் பாஸ்வேர்டை மாற்றத் தேவையில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் கணக்கில் ஊடுருவி அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்கள் யார் என தெரியவில்லை என்றும் அதே சமயம், இச்செயலை செய்தவர்கள் பிறர் ஃபேஸ்புக் கணக்கை தவறாக கையாண்டதாக தகவல் ஏதும் இல்லை என்றும் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 

இந்த பிரச்னையை சரி செய்து விட்டதாகவும் இந்நிகழ்வு குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது. ஃபேஸ்புக் கணக்கில் ஊடுருவல் தகவலை அடுத்து அமெரிக்க பங்குச் சந்தையில் ஃபேஸ்புக்கின் பங்குகள் 2.6% வீழ்ச்சி கண்டன. தகவல் திருட்டு பிரச்னையில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இந்நிகழ்வு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.