செங்கோட்டை file image
இந்தியா

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்: டெல்லியின் முக்கியப் பகுதிகளில் 144 தடை!

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டை மற்றும் ராஜ்காட்டைச் சுற்றி 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட், ஐடிஓ (ITO) மற்றும் செங்கோட்டை போன்ற முக்கியப் பகுதிகளில் சிஆர்பிசி பிரிவு 144இன்கீழ் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்தாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கருத்தில்கொண்டு, ராஜ்காட், ITO, செங்கோட்டை போன்ற பகுதிகளில் 144 அமல்படுத்தப்பட்டது. இந்தப் பகுதிகளில் கூட்டம்கூட அனுமதிக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 16 வரை டெல்லியில் பாராகிளைடர்கள், ஏர்பலூன்கள், ட்ரோன்கள் போன்றவை பறக்க டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.

delhi rajghat, ito

சுதந்தர தினத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைவர்கள் இல்லம் மற்றும் அரசு கட்டடங்கள் போன்றவற்றுக்கு பாதுகாப்பு, டெல்லிக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனை, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை டெல்லி காவல்துறை எடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லி செங்கோட்டை மற்றும் ராஜ்காட்டை சுற்றி 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.