இந்தியா

ராம் ரஹீம் ஆசிரமத்தில் ஆயுதங்கள் உள்ளதா?: துணை ராணுவத்தினர் அதிரடி சோதனை

ராம் ரஹீம் ஆசிரமத்தில் ஆயுதங்கள் உள்ளதா?: துணை ராணுவத்தினர் அதிரடி சோதனை

webteam

தேரா சச்சா சவுதா தலைமையிடம் அமைந்துள்ள ஹரியானா மாநிலம் சிர்சாவில் மிகப்பெரிய அளவில் சோதனைகள் தொடங்கி நடந்து வருகின்றன.

ஹரியானாவிலுள்ள தலைமையகத்தில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்புடன் தேரா சச்சா சவுதா தலைமையகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆபத்தான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போராட்டக்காரர்கள் பதுங்கியுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தேரா சச்சா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால் சமாளிக்க துணை ராணுவப் படையினர், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு வகை ஆயுதங்களுடன் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் மோப்ப நாய்களும் அவர்களுக்கு உதவி வருகின்றன. பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இச்சோதனைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக பாலியல் வன்கொடுமை வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.