இந்தியா

ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு

ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு

jagadeesh

6 மாதங்களுக்கு பிறகு, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மத்திய அரசு வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகளில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை, விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கலாம் என அனுமதி அளித்தது. அதன்படி, ஆந்திரா, அசாம், ஹரியானா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், நாகலாந்து மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று வகுப்புகள் துவங்குகின்றன.

முதற்கட்டமாக 15 நாள்களுக்கு வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, சூழலை கருத்தில் கொண்டு வகுப்புகளை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். மாணவர்கள் வருகை கட்டாயம் இல்லை என்றும் விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் பெற்று வரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதனை, முக்கவசம், கிருமிநாசினி, தனிமனித இடைவெளி, 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவது போன்றவை பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.