உத்தரகாண்ட்டில் குழந்தைகள் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு சென்று வரும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் கத்கோடம் பகுதிக்கு அருகேயுள்ள தன்ஜாலா கிராமத்தை சேர்ந்த மக்கள் வெளியுலகை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், கானோல்வா நதியை கடக்க வேண்டும். இங்கு பாலம் இல்லாததால் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு கயிறு மூலம் தொட்டில் ஒன்றை கட்டி, கிராமத்தில் இருந்து மக்கள் வெளியே சென்று வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் கல்வி கற்க தினமும், இப்படி ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து தான் ஆற்றை கடக்கின்றனர்.
பள்ளிக்கு சென்று மீண்டும் ஊருக்கு திரும்பவும் இப்படி ஆற்றை கடந்து தான் வர வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கயிற்றில் கட்டியுள்ள தொட்டில் மூலமாகவே ஆற்றை கடக்கின்றனர். அரசு தங்கள் சிரமத்தை உணர்ந்து, பாலம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.