மயங்கி விழுந்த மாணவிகள் pt web
இந்தியா

பீகார்: கொளுத்திய வெயிலில் மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!

பீகாரில் கடும் வெயிலால், பள்ளியில் அமர்ந்திருந்த மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

நாடு முழுவதும் கோடை வெயில் உக்கிரமாக சுட்டெரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் சுருவில் 50 புள்ளி 2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. அதே போல டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டீகர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப பாதிப்பை தடுக்க டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை ஓய்வளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கடும் வெயிலில் இருந்து தப்பிக்க அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் ஆகிய இடங்களில் நீர் தெளிப்பு கருவியை பொருத்தவும் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஷேக்புரா என்ற பகுதியில் உள்ள பள்ளிக்கு வந்த மாணவிகள் கடும் வெயிலால் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.