இந்தியா

“மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது தவறில்லை” - கலெக்டர் சர்ச்சை பேச்சு

“மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது தவறில்லை” - கலெக்டர் சர்ச்சை பேச்சு

webteam

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தது தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் தன்வி விளக்கம் அளித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தின் சின்ஹாரா கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசுப்பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் பள்ளியின் கழிவறையை மாப் வைத்து சுத்தம் செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து மாவட்ட ஆட்சியர் தன்வி சுந்தரியல் (Tanvi Sundriyal) விளக்கம் அளித்துள்ளார். அதில், “மாணவர்கள் கழிவறைகளை சுத்தும் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அவர்களுக்கு சுத்தம் தொடர்பாக பயிற்சி கல்வியே அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இதில் எந்தவித தவறுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். ஆட்சியரின் இந்தக் கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.