இந்தியா

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மனு தாக்கல்?

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மனு தாக்கல்?

rajakannan

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களில், விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதாவது ஏற்கனவே உள்ள சட்டத்தில் புதிதாக பல்வேறு வரைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்கு, பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிதாக கொண்டு வந்துள்ள வரைமுறைகள் ஏற்கனவே உள்ள சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் உள்ளதாக கூறி அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், மத்திய அரசு மௌனம் காத்து வந்தது. 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகார பரவலாக்கல்துறை அமைச்சர் தாவர்சந்த் கோஹ்லட் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக தலித் எம்.பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.