காஷ்மீரில் பண்டிட்கள் குறி வைத்து கொல்லப்படுவதை தடுக்க கூடிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட டிக்கா லால் என்பவருடைய மகன் அசுத்தோஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தின் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் காஷ்மீரில் பண்டியிட்டுகள் குறிவைத்து கொல்லப்படுவதாகவும், இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமரும் முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த மனுவை தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி தள்ளுபடி செய்தனர். மனுதாரர் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் உரிய நிவாரணத்தை பெறவும், மெதுவாக மனுவை திரும்ப பெறவும் நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.