இந்தியா

விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

JustinDurai

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு தப்பிச்சென்ற தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கான தண்டனை விவரத்தை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றாா். அவா் நீதிமன்ற உத்தரவை மீறி தனது குடும்பத்தினருக்கு 40 மில்லியன் டாலா் பரிவா்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்ததாக மல்லையாவை குற்றவாளி என தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை கடந்த மாா்ச் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அதில், “நீதிமன்ற சம்மன் அனுப்பியும், எச்சரிக்கை செய்தும் எந்தவிதமான பதிலும் அளிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இதையும் படிக்க: ஷின்சோ அபே கொலையும், அக்னிபாத் திட்டமும் - எச்சரிக்கை விடுக்கும் திரிணமூல் காங்கிரஸ்