இந்தியா

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனுமதி: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

jagadeesh

டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

சென்னையில் உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே மதுபான விற்பனையின் போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என நேற்று அவசர வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.