இந்தியாவில் சாலையோர உணவுகளுக்கு பிரபலமான இடமென்றால் அது வட மாநிலங்கள்தான். அங்குதான் வகை வகையான சாட் நொறுக்குகள் கிடைப்பதுண்டு.
வட மாநிலங்களிலேயே குஜராத்தி உணவுகளுக்கென உணவு பிரியர்களிடையே தனி இடம் உண்டு. அதுவும் வெரைட்டி வெரைட்டியான சாண்ட்விச்களை பிடிக்காது என கூறுவோர் அரிதுதான்.
ஆனால் பல வகை உணவுகளை விரும்பி உண்ணும் ஃபுட்டீஸ்களே ஐயோ எனச் சொல்லி அலறி ஓடும் வகையில் ஒரு திணுசான சாண்ட்விச் வீடியோ பற்றிதான் பார்க்க போகிறோம்.
சீஸ்ஸை கொண்டு தயாரிக்கும் சாண்ட்விச் வகைகள் ஏராளமாக இருக்கும்தான். அதேபோல சாக்லேட் சாண்ட்விச்சும் இருக்கு. ஆனால் சாக்லேட், ஐஸ்க்ரீம், சீஸ் இதையெல்லாம் சேர்த்து ஒரு சாண்ட்விச் கொடுத்தா உங்களால சாப்பிட முடியுமா?
அப்படிதான் குஜராத்தின் பாவ் நகரில் உள்ள தெருவோரத்தில் இருக்கும் ஒரு கடையில் சீஸ் சாக்லேட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் செய்து வியாபாரம் செய்கிறார்கள். அது தொடர்பான வீடியோவில், பிரட்டை ஹார்ட் ஷேப்பில் வெட்டி, அதில் ஜாம் தடவி, டெய்ரி மில்க் சாக்லேட்டை துருவி, அதன் மேல் சீஸ் போட்டு, அதற்கு மேல் சாக்போர் ஐஸ்க்ரீமை இரண்டாக வெட்டி அதை அந்த சீஸ் மேல் வைத்து சாண்ட்விச்சாக தயாரித்திருக்கிறார்கள்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உணவுப்பிரியர்கள் பலரையும் முகம் சுழிக்க செய்திருக்கிறது. இப்படியான காம்பினேஷனில் ஒரு சாண்ட்விச்சா எனக் கேட்டு இணையவாசிகள் பலரும் பதறிப்போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான ஒமர் அப்துல்லாவும் அந்த சாண்ட்விச் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து, “எனக்கு குஜராத்தி உணவுகள் ரொம்பவே பிடிக்கும். இந்த சாண்ட்விச் என் மனதை உலுக்கிவிட்டது. இதை யார் கண்டுபிடித்தார்கள்? இதற்கான சந்தையை எப்படி உருவாக்கினார்கள்? ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 6 லட்சத்துக்கும் அதிகமானோரால் இந்த விநோதமான சாண்ட்விச் வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது.
ALSO READ: