இந்தியா

'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' குழுவில் முக்கிய பங்காற்றியவர் வீர மரணம்..!

Rasus

காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகளைக் கொன்று வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் சந்தீப் சிங், கடந்த ஆண்டு நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தீப் சிங், எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்க முயன்றார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவீரவாதிகளை கொன்ற நிலையில், பலத்த காயமடைந்திருந்த சந்தீப் சிங் வீர மரணம் அடைந்தார். அவரோடு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள், மேலும் 3 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகளை சந்தீப்சிங் தடுத்திருக்காவிட்டால், இந்திய ராணுவத் தரப்பில் உயிரிழப்பு அதிகரித்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டு இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாமினை அழித்தது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனப்படும் இந்த நடவடிக்கையில், தற்போது வீரமணம் அடைந்துள்ள சந்தீப் சிங் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சிங்கிற்கு ஐந்து வயதில் குழந்தை இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.