இந்தியா

''இந்தியா, இலங்கைக்கு மூத்த சகோதரர்போல''- நெகிழ்ந்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா

''இந்தியா, இலங்கைக்கு மூத்த சகோதரர்போல''- நெகிழ்ந்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா

நிவேதா ஜெகராஜா

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவிய இந்தியாவை, மூத்த சகோதரர் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா இன்று பேட்டி அளித்துள்ளார். எப்போதும் அண்டை வீட்டாரைப் போல, தங்கள் நாட்டிற்கு மூத்த சகோதரர் உதவி வருவதாக அதில் அவர் கூறினார். இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இலங்கை மக்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டுவர முயற்சிப்பதாகவும் சனத் ஜெயசூர்யா கூறினார்.

உணவு, மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதுவரை இலங்கைக்கு இரண்டு லட்சத்து 70ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை இந்தியா வழங்கியுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் வழங்கப்பட்டுள்ளது.