இந்தியா

சாலை விழிப்புணர்வு குறித்து சாம்சங் வீடியோ

சாலை விழிப்புணர்வு குறித்து சாம்சங் வீடியோ

webteam

உலக அளவில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றும், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மொபைல் ஃபோன்களின் பயன்பாட்டினாலும், செல்பிகளாலும் உயிரிழப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எனவே, சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், குறிப்பாக மொபைல் ஃபோன் பயன்பட்டால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு பாதுகாப்பான இந்தியா என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு சாம்சங் நிறுவனம் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்து, மத்திய அரசின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளது.  
சாலைகளில் செல்லும்போது செல்பிகளை தவிர்க்க வேண்டும், குடும்ப உறவுகளை நினைத்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, 35 விநாடிகள் ஓடும் இந்த விழிப்புணர்வு வீடியோவில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் வேண்டுகோளும் இடம் பெற்றுள்ளது. 
முன்னதாக, சாம்சங் நிறுவனம் பாதுகாப்பு குறித்த மொபைல் ஆப்களான பைக்மோட், வாக்மோட் உள்ளிட்டவற்றை  அறிமுகம் செய்துள்ளது.