சல்மான் கான் pt web
இந்தியா

தொடர்ச்சியாக வரும் கொலைமிரட்டல்கள்.. பலத்த பாதுகாப்புக்கு இடையே சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வரும் நிலையில் துபாயிலிருந்து குண்டு துளைக்காத காரை அவர் இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டுள்ள நிலையில் துபாயிலிருந்து குண்டு துளைக்காத காரை அவர் இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான் கான் வாங்கியுள்ள 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிஸ்ஸான் காரில் குண்டு துளைக்காத வசதியுடன் சுற்றுப்புறத்தில் குண்டு உள்ளதை முன்கூட்டியே எச்சரிக்கும் அலாரம், தீப்பிடிக்காத தன்மை என பல வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சல்மான் கானிடம் ஏற்கனவே ஒரு குண்டு துளைக்காத கார் உள்ளதாகவும் மேலும் ஒரு கார் வாங்கியதாக வெளியான செய்தி தவறு என்றும் வேறு சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே சல்மான் கானை எப்போதும் 10 காவலர்கள் சூழ்ந்திருக்கும் வகையில் மும்பை காவல்துறை பாது காப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அவரது வீட்டிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பிஷ்ணோய் கும்பலிடமிருந்து மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மீண்டும் இந்தி பிக் பாஸ் (BIG BOSS) படப்பிடிப்பில் சல்மான் கான் பங்கேற்க தொடங்கியுள்ளார்.