இந்தியா

சபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீது இன்று விசாரணை!

சபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீது இன்று விசாரணை!

webteam

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ர தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு செல்ல பெண்கள் சிலர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை வழியிலேயே போராட் டக் காரர்கள் தடுத்து நிறுத்தினர். பதட்டமான சூழல் நிலவியது. இதனிடையே ஐயப்பன் கோயிலின் ஐப்பசி மாதப் பூஜை முடிந்து நடை அடைக் கப் பட்டது. 

இதனிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமா? ஏற்காதா? என்ற சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்களையும் ஏற்பதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அனைத்து சீராய்வு மனுக்கள் மீதும் நவம்பர் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.