ayyappan temple pt desk
இந்தியா

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடைதிறப்பு

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.

webteam

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகள், சிறப்பு பூஜைகள் தவிர, 60 நாட்கள் நடக்கும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் பிரதானமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.

sabarimalai

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார். நடை திறந்தது முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை தினசரி பூஜைகள் நடக்கும். டிசம்பர் 27-ல் மண்டல பூஜைக்குப் பின் நடை அடைக்கப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்படும். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜையும், பொன்னம்பல மேட்டில் 'மகரஜோதி' தரிசனமும் நடைபெறும்.

கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் மட்டும் 47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தாண்டு பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கேரள அரசு, பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.