ஜெய்ப்பூர் சம்பவம் ட்விட்டர்
இந்தியா

ஜெய்ப்பூர்: ரஷ்ய பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. பெட்ரோல் பங்க் ஊழியர்மீது வழக்குப்பதிவு!

ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் உதவியாளரால் ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

யூடியூப்பில் ‘ஆன் ரோடு இந்தியன்’ என்று அழைக்கப்படும் டெல்லியைச் சேர்ந்த டிராவல் வ்லாகர் என்பவர், தனது இந்திய நண்பருடன் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருடைய இருசக்கர வாகனத்தில் ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த ரஷ்யப் பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் தொழிலாளி ஈடுபட்டுள்ளார். பெட்ரோல் பங்க்கில் நடந்த இந்த சம்பவம், ஆண் நண்பரிடன் ஹெல்மெட்டில் இருந்த கேமரா மூலம் பதிவாகியுள்ளது. அந்த நபர் நடந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெளியான வீடியோவில், ரஷ்ய தோழியை தொழிலாளி பலமுறை சீண்டியதாகத் தெரிகிறது. ஆனால், அந்த ஊழியரோ ’தாம் வேண்டுமென்றே தொடவில்லை என்று சொல்லி சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். என்றும் கூறுகிறார். எனினும் அந்த தொழிலாளி மீது புகார் அளிக்க போலீசார் வந்து விசாரித்துள்ளனர். அப்போதும், தொழிலாளி தாம் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடர்ந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ரஷ்ய பெண்மணியின் ஆண் நபர், “ஓர் உணவகத்தில் நானும் தோழியும் சாப்பிட்ட பிறகு, எங்கள் பைக்கை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள பெட்ரோல் பங்க்கிற்குச் சென்றோம். அப்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனால் எங்களின் பயணமே மாறியது. தொழில்நுட்பம் காரணமாக சில காட்சிகள் கேமராவில் சிதைந்ததை அடுத்து, இந்த வீடியோ வெளியாக தாமதமாகி விட்டது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தொடரும் சஸ்பெண்ட் நடவடிக்கை: இன்று 49 எம்.பிக்கள்.. இதுவரை 141 பேர்; விவாதத்தில் முக்கிய மசோதாக்கள்!