இந்தியா

பொருளாதாரத் தடை எதிரொலி - இந்தியாவிடம் இருந்து அதிக முதலீட்டை எதிர்பார்க்கும் ரஷ்யா!

பொருளாதாரத் தடை எதிரொலி - இந்தியாவிடம் இருந்து அதிக முதலீட்டை எதிர்பார்க்கும் ரஷ்யா!

ஜா. ஜாக்சன் சிங்

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை காரணமாக, தனது எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளில் அதிக முதலீட்டை செய்யுமாறு இந்தியாவிடம் ரஷ்யா வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யா மீது அந்த நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. இதனால் ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அதன் வர்த்தகம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. இதனால், தற்போது தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நாடுகளிடம் ரஷ்யா அதிக முதலீட்டை பெற முயற்சித்து வருகிறது.

அதன்படி, தனது எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளில் அதிக முதலீட்டை செய்யுமாறு சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடம் ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.