இந்தியா

ஹரியானா சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் பாஜக அரசு

EllusamyKarthik

ஹரியானா சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக அரசு எதிர்கொள்கிறது.

ஹரியானா மாநிலத்தில் தற்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக (40 எம்.எல்.ஏ) அரசு ஆட்சி செய்து வருகிறது. பாஜக அரசுக்கு ஆதரவாக ஜனநாயக ஜனதா கட்சியும் (10 எம்.எல்.ஏ), சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்களும் (5 எம்.எல்.ஏ) உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை உறுப்பினர்கள் இருவர் அரசிற்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறது ஆளும் கட்சியான பாஜக கூட்டணி. 

“அரசின் மீது பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியே ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறது. சில எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு தொகுதியில்  விவசாயிகளின் ஆதரவு குறைந்து வருவதாக அச்சம் கொண்டுள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏக்களில் இருவர் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆட்சி அமைக்க 45 எம்.எல்.ஏக்கள் என்ற பெரும்பான்மை பாஜகவிற்கு உள்ளதா என்ற சந்தேகம் எழவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தோம்” எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான பூபிந்தர் சிங் ஹூடா. 

“எங்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் நிச்சயம் முறியடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் மனோகர் லால் கட்டார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் இதை செய்துள்ளதாகவும் ஆளும் பாஜக  இடம்பெற்றுள்ள கட்சிகள் தெவித்துள்ளன.