இந்திரேஷ் குமார் எக்ஸ் தளம்
இந்தியா

’’ஆணவமே காரணம்..’’ பாஜக மீது விமர்சனம்.. திடீர் பல்டி அடித்த RSS தலைவர்!

Prakash J

18-வது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அதாவது, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ”பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 240 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம்” என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் சாடியிருந்தார்.

இதுகுறித்து அவர், ”ராமர் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் ஆணவம் பிடித்தவர்களாக மாறினார்கள். அதனால் ராமர் அவர்களுக்கு 240 இடங்களை கொடுத்து அவர்களின் ஆணவத்தை நிறுத்தியிருக்கிறார்.

அதேநேரம், அவர்களின் நம்பிக்கைக்காக அவர்களை பெரிய கட்சியாக உருவாக்கியிருக்கிறார். ராமரை நம்ப மறுத்தவர்களுக்கும் 234 இடங்களை (i-n-d-i-a 2 கூட்டணி) கொடுத்து தோற்கடித்திருக்கிறார். ராமருக்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கவில்லை. ராமரின் ஆட்சி நீதியானது. ராமரின் பக்தர்கள் பணிவுடன் இருக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

இதையும் படிக்க: நாகஸ்த்ரா-1| இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தற்கொலைப் படை ட்ரோன்.. விரைவில் ராணுவத்தில் இணைப்பு!

இவருடைய பேச்சு, பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, அந்தப் பேச்சு குறித்து இந்திரேஷ் குமார் பல்டி அடித்துள்ளார். அவர், “தற்போது நாட்டு மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பது தெளிவாகிறது, ராமரை யார் எதிர்த்தார்களோ அவர்கள் தற்போது அதிகாரத்தில் இல்லை.

ஆனால், ராமர் கோயிலை எழுப்பி அவரைக் கொண்டாடியவர்களுக்குத்தான் ஆட்சி கிடைத்திருக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்” எனக் கூறியதாக அந்தப் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: நிலம் ஆக்கிரமிப்பு| யூசுப் பதானுக்கு நோட்டீஸ்.. ஆட்டத்தை ஆரம்பித்த குஜராத் அரசு!