மோகன் பகவத் எக்ஸ் தளம்
இந்தியா

”இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; வங்கதேசத்தில் என்ன நடந்தது?” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “'இந்து தர்மம்' என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அல்ல. மாறாக அனைத்து மனித இனத்திற்கும் சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டு, அது உலகிற்கு ஒரு மதமாக மாற்றுகிறது.

இந்தியாவில் பல மதங்கள் இருந்தாலும், அவற்றை இணைக்கும் அடிப்படையான ஆன்மிகமே தர்மத்தை வரையறுப்பதாக இருக்கிறது.
மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் தலைவர்

தர்மம் என்பது இந்தியாவின் ஸ்வா (சுய)மே தவிர, மதம் அல்ல. இந்தியாவில் பல மதங்கள் இருந்தாலும், அவற்றை இணைக்கும் அடிப்படையான ஆன்மிகமே தர்மத்தை வரையறுப்பதாக இருக்கிறது. தர்மம் இந்தியாவின் உயிர்; அது நமது உத்வேகம். அதனால்தான் நம்மிடம் வரலாறு உள்ளது. அதற்காக மக்கள் தங்களை தியாகம் செய்தனர். நாம் யார்? இந்த தர்மம் சர்வசாதாரணமானது; சனாதனமானது; மேலும், பிரபஞ்சத்துடன் உருவானது; இது அனைவருக்கும் சொந்தமானது. எனவே, இதை இந்து தர்மம் என்று அழைக்கிறோம். இது மனிதநேயத்திற்கும் உலகத்திற்கும் ஒரு மதம்” என்றார்.

இதையும் படிக்க; ”அந்த ட்ரெஸ் உனக்கு சரியில்ல.. மீறினா ஆசிட் ஊத்துவேன்” - மிரட்டிய இளைஞர்.. நிறுவனம் கொடுத்த ஷாக்!

தொடர்ந்து அவர், “நாம் ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால் சிலசமயங்களில் மக்கள், பிரச்னை இல்லாத இடங்களில்கூட, பிளவுகளை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். நாம் வேறுபட்டவர்கள், தனித்தனியாக இருக்கிறோம் என்ற எண்ணத்தை அவர்கள் தூண்டி, அரசாங்கம், சட்டம் மற்றும் நிர்வாகத்தின்மீது மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள். இது நம்மைப் பலவீனப்படுத்துகிறது.

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் என்ன நடந்தது? அதற்குச் சில உடனடி காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்த குழப்பத்தால், இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அங்கு மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன. இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மையினரும் ஆபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். நாம் எங்கிருந்தாலும் அட்டூழியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மையினரும் ஆபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். நாம் எங்கிருந்தாலும் அட்டூழியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் தலைவர்

’இந்தியாவிடமிருந்து எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே இந்தியாவைத் தடுக்கக்கூடிய அணு ஆயுதம் அவர்களிடம் இருப்பதால் நாங்கள் பாகிஸ்தானின் பக்கம் இருக்க வேண்டும்’ என பங்களாதேஷில், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய விவாதங்களையும் செய்திகளையும் எந்தெந்த நாடுகள் முன்வைக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்தியாவிலும் அத்தகைய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இஸ்ரேல்- காஸார் போர் கவலையை அளிக்கிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவரும் கவலைப்படுகிறார்கள். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. ஆனால் இது ஒரு சம்பவம் அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிக்க: காதல் விவகாரம்| மகளைக் கொலைசெய்ய திட்டம் தீட்டிய தாய் படுகொலை.. கொலையாளி வைத்த எதிர்பாராத ட்விஸ்ட்!