கேரளா மாநிலம் பெருந்தல்மன்னாவில் தடைசெய்யப்பட்ட 3 கோடி மதிப்பிலான தடைசெய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவில் தடைசெய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைள் அடிக்கடி நடந்து வருகின்றது. இந்த நிலையில் பெருந்தல்மன்னாவில் தடைசெய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கபட்டுள்ளதாக கேரளா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியை சேர்ந்த சம்சுதீன் மற்றும் கேரளாவை சேர்ந்த அபூட்டி, ஆதில் ஆகியோர்கள் பதுக்கி வைத்திருந்த 3 கோடியே 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர். கூடலூரை சேர்ந்த சம்சுதீன், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது, எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.