ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் file image
இந்தியா

இன்னும் மக்களிடம் புழங்கும் ரூ.7,581 கோடி 2000 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

Prakash J

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அடித்தட்டு மக்கள் பெரும் அவஸ்தையைச் சந்தித்தனர். இதற்கிடையே, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதை மாற்றுவதற்கும் மக்கள், சிரமப்பட்டனர்.

2000 ரூபாய்

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவிற்கு தொடரும் சோகம்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி!

அந்தகாலகட்டத்தில் 3.56 லட்சம் கோடி மதிப்புடைய ரூ. 2,000 நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் இருந்தன. 2023 அக்டோபர் 7ஆம் தேதிக்குள் வங்கிகள் மூலமாகவோ, ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலோ நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில், பல்வேறு வழிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

Reserve Bank of India

இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், ஆனால், 7,581 கோடி ரூபாய் (2.1 சதவீதம்) இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கபில், ஸ்ரீசாந்த், SKY.. 3 கேட்ச்களால் வசமான 3 உலகக்கோப்பைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்!