ரோகித் வெமுலா ட்விட்டர்
இந்தியா

ரோஹித் வெமுலா சாதி விவகாரம்| குடும்பத்தினர் எதிர்ப்பு.. மறுவிசாரணை நடத்த முடிவு!

Prakash J

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா கடந்த 2016ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முன் பல்கலைக்கழக வேந்தருக்கு ரோஹித் வெமுலா எழுதியிருந்த கடிதத்தில் தனக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும், தன்மீது போலியான புகார்கள் சுமத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பல்கலைக்கழகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட சாதிக் கொடுமையால்தான் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து ரோஹித் வெமுலா மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இதையும் படிக்க: புதிய 100 ரூபாய் தாளில் இந்திய பகுதிகள்.. நேபாள அரசின் புதிய வரைபடத்தால் சர்ச்சை!

இந்த வழக்கின் விசாரணை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நிலையில், நேற்று (மே. 3) தெலங்கானா காவல்துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், 2016இல் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பட்டியலின பிரிவைச் சார்ந்தவரல்ல என்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா டிஜிபி ரவி குப்தா, “அந்த அறிக்கையில் சில சந்தேகங்கள் உள்ளன. ரோஹித் வெமுலாவின் தாயும், அவரைச் சார்ந்தோரும் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH.. செம்ம உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா மாறன்.. #ViralVideo