இந்தியா

துரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி!

துரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி!

webteam

ஜம்முவில் இருந்து டெல்லி வந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

ஜம்முவில் இருந்து டெல்லிக்கு 12266 என்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் சென்று வருகிறது. ஜம்முவில் புறப்பட்ட இந்த ரயில் இன்று அதிகாலை டெல்லி அருகே வந்துகொண்டிருந்தது. காலை 4 மணியளவில் சாரை ரோகில்லா ஸ்டேஷன் அருகே வந்தபோது, சிக்னலுக்காக நின்றது. 

அப்போது பி3, பி7 ஆகிய குளிர்சாதன பெட்டிகளில் திடீரென, பத்து பேர் கொண்ட கும்பல் ஏறியது. அவர்கள் கைகளில் கூர்மையான கத்தி உள்ளி ட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை மிரட்டி, நகைகள், பணம், செல்போன் ஆகியவற்றைக் கொள்ளையடித் து விட்டு தப்பிவிட்டனர். அப்போது அந்த கோச்-சில் ரயில்வே போலீசார் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அளித்த புகாரை அடுத்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.